×

வில்லிபுத்தூர் அருகே வீட்டின் முன் நிறுத்திய பைக் தீ வைத்து எரிப்பு 2 பேர் மீது வழக்கு

வில்லிபுத்தூர், ஜூன் 25: வில்லிபுத்தூர் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு தனது பைக்கைவீட்டின் முன் நிறுத்தியிருந்தார். இரவு அங்கு வந்த 2 மர்மநபர்கள் இவரது பைக்குக்கு தீ வைத்தனர். இதில் பைக் எரிந்து நாசமானது.

இது தொடர்பாக நகர் போலீசில் ஹரிஹரன் புகார் அளித்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இது தொடர்பாக வில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அத்திகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : Villiputhur ,Athikulam ,
× RELATED வன்கொடுமைகளை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆர்ப்பாட்டம்