×

தமிழ்நாடு முதலமைச்சர் ராகுல் காந்தி வாயிலாக மேகதாது அணை கட்டும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்: விவசாயிகள் நல உரிமைச் சங்கம் வலியுறுத்தல்

 

மன்னார்குடி, ஜூன் 25: தமிழ்நாடு முதலமைச்சர் ராகுல் காந்தி வாயிலாக மேகதாது அணைய கட்டுப்பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் நல உரிமை சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்க தலைவர் ராஜபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் சட்டவிரோதமாக அணைக்கட்டும் முயற்சியில் கர்நாடக முதல்வர் சிவக்குமார் தீவிரம் காட்டி வருகிறார். இதையடுத்து, போராட்டத்தில் இறங்கிய தமிழக விவசாயிகளின் நியாயமான உணர்வை புரிந்து கொண்ட தமிழ்நாடு அரசு மேகதாது அணை தொடர்பாக அனைத்து கட்சியினரின் ஆதரவோடு தீர்மானத்தை சட்ட சபையில் நிறைவேற்றி உள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு அரசுடன் அணை விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு தயார் எனவும், அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சாதகம் என்றும், கர்நாடக முதல்வர் டி கே சிவக்குமார் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறான கருத்து ஆகும்.

Tags : Mekedadu dam ,Tamil Nadu ,Chief Minister ,Rahul Gandhi ,Farmers' Welfare Rights Association ,Mannargudi ,Tamil Nadu Farmers' Welfare Rights Association ,President ,Rajapalan ,
× RELATED பனப்பாளையத்தில் இன்று மின் தடை