×

கல்வராயன்மலை உண்டு உறைவிட பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது

 

கள்ளக்குறிச்சி, ஜூன் 25: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் உள்ள வெள்ளிமலை அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் கடந்த 21ம் தேதி சிங்கபெண் காவல் படையினர் சார்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நடத்தினர். அப்போது அந்த பள்ளியில் பயிலும் 9ம் வகுப்பு மாணவிகள் 5 பேர் தங்களை இப்பள்ளியில் பணியாற்றி வரும் கள்ளக்குறிச்சி சிதம்பரம்பிள்ளை தெரு பகுதியை சேர்ந்த சுரேஷ்(44) கணினி ஆசிரியர் என்பவர் கடந்த 18ம் தேதி பள்ளி வகுப்பறையில் பாலியல் தொல்லை கொடுத்தாக சிங்கப்பெண் காவல் படையினரிடம் புகார் தெரிவித்ததாக தெரிகிறது. இதுசம்மந்தமாக பெண் காவலர்கள் உடனடியாக பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சுரேஷிடம் தகவல்
அளித்துள்ளனர்.

Tags : POCSO ,Kalvarayanmalai Boarding School ,Kallakurichi ,Vellimalai Government Ekalavya Model Boarding Higher Secondary School ,Kalvarayanmalai ,Kallakurichi district ,
× RELATED மரக்காணம் அருகே நடுக்குப்பம்...