வில்லிபுத்தூர், ஜூன் 25: வில்லிபுத்தூர் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு தனது பைக்கைவீட்டின் முன் நிறுத்தியிருந்தார். இரவு அங்கு வந்த 2 மர்மநபர்கள் இவரது பைக்குக்கு தீ வைத்தனர். இதில் பைக் எரிந்து நாசமானது.
இது தொடர்பாக நகர் போலீசில் ஹரிஹரன் புகார் அளித்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இது தொடர்பாக வில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அத்திகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
