×

நீர்நிலை தூர்வாரும் பணிக்காக பாபநாசம் வட்டாட்சியர் ரூ.1 லட்சம் நிதி வழங்கல்

 

தஞ்சாவூர், ஜூன் 25: நீர்நிலை தூர்வாரும் பணிக்காக தஞ்சை கலெக்டரிடம் பாபநாசம் வட்டாட்சியர் ரூ.1 லட்சம் நிதி வழங்கினார். பாபநாசம் வட்டத்தில் பணிபுரியும் அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பில் நீர் நிலைகளை தூர்வாரும் பணிக்காக மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆலோசனையின் படி தஞ்சை மாவட்ட கலெக்டர் ரேவதியிடம் பாபநாசம் வட்டாட்சியர் சந்தனவேல் ரூ.1 லட்சம் நிதியாக வழங்கினார். நிகழ்வில் வருவாய் ஆய்வாளர் கலாநிதி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் பாக்கியராஜ், கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ்குமார், வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Papanasam Taluk ,Chief Minister ,Thanjavur ,
× RELATED பனப்பாளையத்தில் இன்று மின் தடை