×

டிஎன்பிஎஸ்சி வாயிலாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்கள், இளநிலை திட்ட அமைப்பாளர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் ராஜ்குமார் வழங்கினார்

 

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட 2 உதவி பொறியாளர்கள் மற்றும் 7 இளநிலை திட்ட அமைப்பாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் வழங்கினார். சென்னைப் பெருநகரப் பகுதியின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்கு விரிவான திட்டமிடல் தேவை என்பதை உணர்ந்து 1972-ல் மெட்ராஸ் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் என்ற பெயரில் தற்காலிக அமைப்பாக தொடங்கப்பட்டு, பின்னர் 1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம், 1971-ன் கீழ் சட்டப்பூர்வ குழுமமாக மாற்றப்பட்டது.

சென்னைப் பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்கால தேவைகளைக் கருதி பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், அரசின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் பெருநகரத் திட்டமிடல் தொடர்பான கொள்கை முடிவுகளை செயல்படுத்துதல், முழுமைத் திட்டம் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் செயல்படுத்தி வருகிறது.

முதல்வர் விஜயின் வழிகாட்டுதலின்படி இன்று சென்னை, எழும்பூர், தாளமுத்து-நடராசன் மாளிகையில் உள்ள சி.எம்.டி.ஏ. அலுவலகக் கூட்டரங்கில் அமைச்சர் ப.ராஜ்குமார் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 2 உதவி பொறியாளர்கள் மற்றும் 7 இளநிலை திட்ட அமைப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில் சென்னை வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் ஆ.ர.ராகுல் நாத், முதன்மை செயல் அலுவலர் ச.ப.கார்த்திகா, தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் ந.ரவிக்குமார், பெ.கஜேந்திரன், சி.எம்.டி.ஏ. நிர்வாக அலுவலர் மு.இந்துமதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Minister ,Rajkumar ,TNPSC ,Chennai ,P. Rajkumar ,Tamil Nadu Public Service Commission ,Chennai… ,
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல்...