×
Saravana Stores

அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூபர் சங்கரின் கோரிக்கை நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: யூடியூபர் சங்கருக்கு எதிராக இரண்டாவதாக போடப்பட்ட குண்டாசை ரத்து செய்ய வேண்டும் என்று அவரது தாயார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன்,‘‘படிக்க போதுமான புத்தகங்கள் இல்லை என்பதால் சங்கரை சென்னை சிறைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றார். இதை நிராகரிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், ‘‘இந்த வழக்கை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். அன்றைய தினம் குண்டர் சட்டத்தை பயன்படுத்தி சங்கரை கைது செய்யப்பட்டது சரியா அல்லது தவறா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படும். சிறை மாற்றம் குறித்து தற்போது எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது. என்று உத்தரவிட்டனர். இதில் முன்னதாக சங்கர் மீதான எப்.ஐ.ஆர்களை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் முன்னதாக திட்டவட்டமாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

The post அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூபர் சங்கரின் கோரிக்கை நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Shankar ,Supreme Court ,New Delhi ,YouTuber ,JP Paridiwala ,Manoj Mishra ,
× RELATED கோடை விடுமுறை என்பது நீதிமன்ற பகுதி...