இவ்விவரங்கள் மண்டல கால்நடை உதவி மருத்துவர்களால் சரிபார்க்கப்பட்டு, செல்லப்பிராணிக்கான உரிமம் உறுதிப்படுத்தப்படும். இவ்விவரம் குறுஞ்செய்தி மூலம் செல்லப்பிராணியின் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்படும். பிறகு, இதற்கான கட்டணம் ரூ.50ஐ ஆன்லைன் மூலம் செலுத்தி செல்லப்பிராணி வளர்ப்பதற்கான உரிமத்தை சென்னை மாநகராட்சியின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த உரிமம் அது வழங்கப்பட்ட நாளிலிருந்து ஓராண்டிற்கு செல்லுபடியாகும். ஆண்டுதோறும் இந்த உரிமத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும். மேலும், சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களில் வெறிநாய்க்கடி நோய்த்தடுப்பூசி உரிமம் பெற்ற செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதக் காலத்தில் இத்திட்டதின் மூலம் 376 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உரிய பரிசீலனை செய்யப்பட்டு, 121 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகராட்சிகுட்பட்ட பகுதிகளில் உள்ள செல்லப்பிராணிகள் வளர்ப்போர் அதற்கான உரிமத்தை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்பதால் இச்சேவையை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாய்ப்பை அனைத்து செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களும் பயன்படுத்திக் கொண்டு, சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பதிவேற்றம் செய்து, ஆன்லைன் வாயிலாக ரூ.50 செலுத்தி, தங்கள் செல்லப் பிராணிகளுக்கான உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
The post செல்லப்பிராணிகளை வளர்க்க ஆன்லைனில் உரிமம் பெறலாம் appeared first on Dinakaran.