டாஸ்மாக் பார் ஏலம் வரும் 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: டாஸ்மாக் பார் ஏலம் தொடர்பாக வரும் 1ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மண்டலத்திற்குட்பட்ட 17 மாவட்டங்களில் சென்னை தெற்கு, மத்தியம், வடக்கு, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு மதுபான கடைகளுடன் இணைந்த பார்களுக்கான உரிமம் கடந்த 31.8.2022 அன்றுடன் முடிவடைந்தது. மது கூட உரிமையாளர்கள் நீதிமன்றத்திற்கு சென்றதால் அடுத்த டென்டர் கடந்த ஓராண்டிற்கு மேலாக நடத்தப்படாமல் இருந்தது. தற்போது, நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு முடிவுற்ற நிலையில் டாஸ்மாக் நிறுவனமானது இ-டெண்டர் மூலம் மது கூடத்திற்கான டெண்டரை நடத்த முடிவு செய்து கடந்த 7ம் தேதி தொடங்கி இன்று (27ம் தேதி) பிற்பகல் 2 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரும் 1ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என மது கூட உரிமையாளர்களுக்கு கால அவகாசம் நீட்டித்து டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே இ-டெண்டர் மூலம் விண்ணப்பிக்கும் போது மது கூட உரிமையாளர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தையும் டாஸ்மாக் நிறுவனம் தெளிவுபடுத்தும் என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டாஸ்மாக் பார் ஏலம் வரும் 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: