உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மையம் இங்கிலாந்தில் அமைகிறது: பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு

லண்டன்: உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மையம் இங்கிலாந்தில் அமைகிறது. செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு உச்சி மாநாடு நவம்பர் 1 மற்றும் 2ல் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் சுனக் நேற்று உரையாற்றுகையில்,‘‘ தொழில் புரட்சி, மின்சாரம், இன்டர்நெட்டை போல் செயற்கை நுண்ணறிவும் மிக பெரிய மாற்றங்களை கொண்டுவரும். இந்த செயற்கை நுண்ணறிவினால் முன்னேற்றங்கள் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பு இருந்தாலும், புதிய ஆபத்துகளும், அச்சங்களும் ஏற்படலாம். செயற்கை நுண்ணறிவு என்பது, ரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்கள் உருவாக்குவதை வழிவகுக்கும்.

தீவிரவாத குழுக்கள் இதை பயன்படுத்தி அச்சத்தையும் அழிவையும் பெரிய அளவில் உருவாக்கலாம். எனவே நாட்டின் தலைவர்கள் இதை தீவிரமாக எடுத்து கொண்டு செயலாற்ற வேண்டியது என்னுடைய கடமையாக கருதுகிறேன். அதற்காகதான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. புதிய வகை செயற்கை நுண்ணறிவுகளை ஆய்வு செய்வதிலும் சோதனை செய்வதிலும் நாடு முன்னணியில் இருக்கிறது. உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மைய தலைமையகமாக இங்கிலாந்து இருக்கும். இதற்காக ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும்’’ என்றார்.

 

The post உலகின் முதலாவது செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மையம் இங்கிலாந்தில் அமைகிறது: பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: