மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாளின் ஆலோசனை

சென்னை: மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாளின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதற்கு முன்னதாக சென்னை தலைமை செயலகத்தில் இருக்க கூடிய நாமக்கல் கவிஞர் மாளிகையில் ந்டைபெற கூடிய இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வங்கி மேலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தொடக்கத்தில் பேசிய நிதிதுறை செயலாளர், ஒரு பயனாளி கூட விடுபடாமல் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில், சிறப்பு முகாமல்கள் அமைத்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில், கூட குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை அளிக்கபடும் என்ற வாக்குறுதி அளிக்கபட்டது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில், செப்.5-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தபடும் என தெரிவித்திருந்தார். மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை நடைமுறைபடுத்துவது குறித்தும், யார் யாருக்கெல்லாம் இந்த தொகையை வழங்கலாம் என்பது குறித்தெல்லாம் அன்மையில் ஆலோசனை மேற்கொண்டிருந்த நிலையில் தான் மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் இந்த ஆலோசனை கூட்டம் ந்டைபெறுகிறது.

இதற்காக சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கபட்டுள்ளார். சுமார் ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 1 கோடி மகளிருக்கு உரிமை தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது.

The post மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாளின் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: