×

கரு சுமக்கும் பெண்கள் திராவிட மாடல் ஆட்சியில் இனி கருவறைக்குள்ளும் செல்வார்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: கரு சுமக்கும் பெண்கள் திராவிட மாடல் ஆட்சியில் இனி கருவறைக்குள்ளும் செல்வார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆர்வமும், பக்தியும் உள்ள எவரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை உணர்த்தும் வகையும் தமிழ்நாட்டில் முதல்முறையாக 3 பெண்கள் அர்ச்சகர் பயிற்சி பெற்றுள்ளனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் அடுத்த மைல் கல்லாக பெண்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படவுள்ளனர். இந்நிலையில், 3 பெண்கள் அர்ச்சகர் பயிற்சியை முடித்ததை சுட்டிக் காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.

அதில், பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது. ஆனால், அந்நிலை இனி தமிழ்நாட்டில் இல்லை. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் மூலம் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிடமாடல் ஆட்சி அகற்றியது. தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்ற 3 பெண்கள் அர்ச்சகருக்கான தகுதியை பெற்றுள்ளனர். கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள் செல்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

The post கரு சுமக்கும் பெண்கள் திராவிட மாடல் ஆட்சியில் இனி கருவறைக்குள்ளும் செல்வார்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,M. K. Stalin ,
× RELATED அடுத்த நிதி நிலை அறிக்கையில்...