நமக்கு நாமே திட்டம் தன்னார்வலர்கள் முயற்சிக்கு கை மேல் பலன்: வறண்ட ஏரி நிறைந்து வருவதால் மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்

கோவை: ஆக்கிரமிப்புகள் எதிரொலியாக நீர்வழி பாதை மறிக்கப்பட்டதால் வறண்ட நிலையில் இருந்த கோவை சின்னவேடம்பட்டி நமக்கு நாமே மற்றும் சமூக பொறுப்பு நீதி திட்டத்தின் கீழ் புது பொலிவு பெற்றுள்ளது. கோவையின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக இருந்தது சின்னவேடம்பட்டி ஏரி ஆனால் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பு, ஓடைகள் சிதைவு கழிவு பொருட்கள் போன்றவற்றால் சின்னவேடம்பட்டி ஏரிக்கு 30 ஆண்டுகளாக தண்ணீர்வரத்து தடைப்பட்டதால் ஏரி முற்றிலும் வறண்ட நிலையில் இருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டம் மற்றும் தனியார் நிறுவன பங்களிப்புடன் ஆர்வலர்கள் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பல்வேறு புனரமைப்பு பணிகளை மேற்கொண்ட நிலையில் அதற்கு தற்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது. கோவையில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கணுவாய் தடுப்பணை நிறைந்து ராஜ வாய்க்கால் மூலம் சின்னவேடம்பட்டி ஏரிக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

The post நமக்கு நாமே திட்டம் தன்னார்வலர்கள் முயற்சிக்கு கை மேல் பலன்: வறண்ட ஏரி நிறைந்து வருவதால் மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: