×

நடை போட்டியில் சாதித்த தமிழக வீரர்: துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து

நடை போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரர் செர்வின் செபாஸ்டியனுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தி: 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப், 20 கி.மீ. நடை போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற செர்வின் செபாஸ்டியனுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகள்.

இப்போட்டிகளில் இந்தியா வென்ற முதல் பதக்கமாக, செர்வின் வென்ற பதக்கம் அமைந்துள்ளது. அவரது சாதனையில் அளவு கடந்த பெருமை கொள்கிறோம். சர்வதேச பதக்க திட்ட விளையாட்டு வீரராக இந்த சாதனையை அவர் அரங்கேற்றி உள்ளார். அவரது வெற்றி ஒவ்வொரு இளைஞருக்கும் ஆற்றல் வாய்ந்த செய்தியை தந்துள்ளது. அர்ப்பணிப்பு, விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக செபாஸ்டியன் திகழ்கிறார்.

The post நடை போட்டியில் சாதித்த தமிழக வீரர்: துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Deputy Chief Minister ,Udhayanidhi ,Udhayanidhi Stalin ,Chervin Sebastian ,26th Asian Athletics Championship ,
× RELATED தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20...