பேரூர் மற்றும் ஒன்றியங்களில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை அதிக அளவில் வழங்கிட வேண்டும். மேலும் பிறந்தநாள் அன்று அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஆண் குழந்தைகள் அனைவருக்கும் தங்க மோதிரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் சேகர், பேரூர் செயலாளர் பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சஞ்சய்காந்தி. மாவட்ட மாணவர் அணி நிர்வாகி சுரேஷ்குமார், ஒன்றிய துணைச் செயலாளர் குப்புசாமி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் குமரன், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் சுகுமாரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post வாலாஜாபாத்தில் ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம்: எம்எல்ஏ, எம்பி பங்கேற்பு appeared first on Dinakaran.