இதை ஒட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு ஊர்களிலும் விநாயகர் சிலை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 5 ரகங்களில் 6 விதமான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சிக்ஸ்பேக் விநாயகர் சிலை வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இதேபோல் இளைஞர்களை அதிகம் கவரும் வகையில் ஹீரோ பைக்கில் வல்லபகணபதியும், புல்லட் பைக்கில் ஏகாந்தக்கணபதியும் நகரில் வலம் வருவது போன்றும் சிலைகள் விதவிதமாக தயார் செய்யப்பட்டுள்ளது.
The post விநாயகர் சதுர்த்தி நெருங்குகிறது… ராஜபாளையத்தில் 6 விதமான சிலைகள் தயாரிப்பு: இளைஞர்களை கவரும் சிக்ஸ்பேக் கணபதியும் ரெடி appeared first on Dinakaran.