இதற்கு முன்னதாக, பள்ளி மாணவி செ.தேவசேனா அனைவரையும் வரவேற்றார். கணிதவியலை மையமாகக் கொண்டு மாணவர்களின் அணிவகுப்பு கண்ணைக்கவரும் வகையில் இனிதே நடந்தேறியது. இதனைத் தொடர்ந்து, பலவித போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், மாணவர்கள் கண்ணைக் கவரும் வகையில் யோகா மற்றும் கூட்டுப் பயிற்சிகளைச் சிறப்பாக செய்துகாட்டினர். அனைத்து, விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்குப் சிறப்பு விருந்தினர் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி, மாணவர்களையும், ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்புரை ஆற்றினார். இறுதியாக பள்ளி மாணவி மித்ரா நன்றி கூறினார்.
The post வித்யாசாகர் குளோபல் பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு விழா appeared first on Dinakaran.