இந்நிலையில் வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு வர வேண்டிய காய்கறிகள் வரத்து கடந்த மாதம் குறைவாக இருந்தது. இதனால் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்தது. மற்ற காய்கறிகள் குறைந்த நிலையில் தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. தினந்தோறும் தக்காளி விலை மட்டும் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் கிலோவிற்கு ரூ.50 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.180க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு பெட்டி தக்காளி ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. சிறிய ரக தக்காளி ரூ.100, 120க்கு விற்பனை செய்யப்படுகிறது.தக்காளி விலை உயர்வால், பல உணவகங்களில் தக்காளி சாதம் விற்பனை செய்யப்படுவதில்லை. சமையலுக்கு கிலோ கணக்கில் வாங்கிய தக்காளியை தற்போது, 100 கிராம், 250 கிராம், 500 கிராம் என குறைந்த அளவில் பெண்கள் வாங்கி செல்கின்றனர். தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ள னர்.
The post வேலூரில் தினமும் ஏறுமுகம் தக்காளி ஒரு கிலோ ரூ.180க்கு விற்பனை: பொதுமக்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.