×

வேலூர், கனடா போலீசில் போட்டி புகார் ஓராண்டாக முதலிரவுக்கு மறுப்பு – மனைவி கட்டாய உறவுக்கு வற்புறுத்தல் -கணவன்

வேலூர்: திருமணம் செய்து ஓராண்டாக முதலிரவுக்கு கணவன் மறுப்பதாக மனைவியும், கட்டாய உறவுக்கு வற்புறத்துவதாக கணவனும் வேலூர், கனடா போலீசில் போட்டி புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூரை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எம்டெக் பட்டதாரியான எனக்கும், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த கமலேஷ்(31) என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்தாண்டு மார்ச் மாதம் திருமணமானது. அப்போது எனக்கு தாய் வீட்டில் இருந்து வரதட்சணையாக 35 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்டவை வழங்கினர்.

எனது கணவர் கனடா நாட்டு குடியுரிமை பெற்று அங்கு இன்ஜினியராக உள்ளார். திருமணம் நடந்து முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் அவர், தனக்கு உடல்நிலை சரியில்லை, தற்போது முதலிரவு வேண்டாம். கனடா நாட்டில் வைத்துக்கொள்ளலாம் எனக்கூறினார். சில நாட்களிலேயே எனக்கு விசா ஏற்பாடு செய்வதாக கூறிவிட்டு அவர் மட்டும் கனடா சென்றுவிட்டார். முன்னதாக எனது 35 சவரன் நகைகளை வங்கியில் அடமானம் வைத்து பணம் பெற்று சென்றார். தொடர்ந்து எனது மாமியார், மாமனார் 100 சவரன் நகை வரதட்சணையாக வாங்கி வரும்படி கூறி சித்ரவதை செய்தனர்.

தனது மகன் கனடாவில் ரூ.8 லட்சம் சம்பாதிக்கும் நிலையில், பெரிய இடங்களில் வரன் வந்தும் அதனை புறக்கணித்து எனக்கு திருமணம் செய்ததாக கூறி திட்டினர். சில மாதங்களில் எனக்கும், எனது மாமியாருக்கும் சேர்த்து கணவர் விசா எடுத்து கனடாவுக்கு அழைத்துச்சென்றார். ஆனால் அங்கும் முதலிரவு நடக்காமல் புறக்கணித்தார். பின்னர் அளவு சாப்பாடு போட்டு சித்ரவதை செய்தனர். இந்நிலையில் குழந்தை பெற்றுக்கொள்வற்காக எனது மனைவி என்னை நிர்பந்தம் செய்து தாம்பத்ய உறவுக்கு அழைக்கிறார் என கனடா நாட்டு போலீசில் என் மீது கணவர் புகார் அளித்தார். அதன் பின்னர் என்னை தவிக்கவிட்டு மாமியாரும், கணவரும் வேறு எங்கோ சென்றுவிட்டனர்.

பின்னர் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் கனடா நாட்டில் இருந்து தாய்நாடு திரும்பினேன். எனது கணவர் கனடா நாட்டு குடியுரிமை பெற்றுள்ளதால், அங்கேயே என்னை விவாகரத்து செய்ய உள்ளதாக மெசேஜ் அனுப்பினார். இதற்கு எனது கணவரின் பெரியப்பா முனிரத்தினம், அவரது மனைவி ராஜேஸ்வரி, மாமானர் முத்துகாளத்தி, மாமியார் புவனேஸ்வரி ஆகியோர் காரணமாக உள்ளனர். என் கணவர் ஆண்மை தகுதி இல்லாததை மறைத்து, திருமணம் செய்துள்ளார். எனவே கணவர், அவரது பெற்றோர், பெரியப்பா, பெரியம்மா ஆகிய 5 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post வேலூர், கனடா போலீசில் போட்டி புகார் ஓராண்டாக முதலிரவுக்கு மறுப்பு – மனைவி கட்டாய உறவுக்கு வற்புறுத்தல் -கணவன் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Canada Police ,
× RELATED ரூ.1 கோடியில் புதுப்பொலிவு பெறும்...