The post தினமும் தேவையற்ற அரசியலை பேசி தமிழ்நாட்டில் சலசலப்பை ஆளுநர் உருவாக்குகிறார்: ஜவாஹிருல்லா எம்எல்ஏ கண்டனம் appeared first on Dinakaran.
தினமும் தேவையற்ற அரசியலை பேசி தமிழ்நாட்டில் சலசலப்பை ஆளுநர் உருவாக்குகிறார்: ஜவாஹிருல்லா எம்எல்ஏ கண்டனம்

- கவர்னர்
- ஜவசலப
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- Jawahirullah
- சட்டமன்ற உறுப்பினர்
- சென்னை
- R.R. N.N.
- ரவி
- ஜவஹிரில்லா
சென்னை: தமிழ்நாட்டில் அன்றாடம் தேவையற்ற அரசியலை பேசி ஆளுநர் ஆர்.என்.ரவி சலசலப்பை உருவாக்குகிறார் என்று ஜவாஹிருல்லா எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை குறை கூறியுள்ளார். 2019 செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்த போது இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது வைத்த விமர்சனத்தை பிரதமர் மோடியின் மீதும் ஆளுநர் வைப்பாரா? தமிழ்நாட்டை முன்னேறிய மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் மீது காழ்ப்புணர்வுடன் கருத்துக்களை தெரிவித்து வரும் ஆளுநரின் இந்த செயல் கண்டனத்துக்குரியது. அன்றாடம் தேவையற்ற அரசியலைப் பேசி தமிழ்நாட்டில் தேவையற்ற சலசலப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஆளுநர். ஆளுநருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.