சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு முடக்குகிறது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய பாஜ ஆட்சியில் சாதி அடிப்படையிலான பிரதிநிதித்துவம் மோசமான பாகுபாட்டை காட்டுகிறது. இந்த பாகுபாடு அவர்களை சமுதாயத்தில் உயர்வதை தடுக்கிறது. பிற பின்தங்கிய சமுதாயத்தினருக்கு அவர்களுக்கான உரிமையை வழங்காவிட்டால் சமூகநீதி கனவு நிறைவேறாது. அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்துவதன் மூலமே சமூக நீதியை நிலைநாட்ட முடியும். இதற்கு ஒரே வழி, ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே. பின்தங்கிய வகுப்பினருக்கு எதிராக பாஜ அரசு இருப்பதால்தான், சாதிவாரி கணக்கெடுப்பை முடக்கப் பார்க்கிறார்கள். மகளிர் இடஒதுக்கீடு கூட முழு மனதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. தேர்தலை வாக்கு வங்கி அரசியலை கணக்கில் கொண்டு, கண்துடைப்புக்காக நிறைவேற்றியிருக்கிறார்கள்.வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்படும்.

The post சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு முடக்குகிறது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: