- மத்திய அமைச்சர் சிந்தியா
- புது தில்லி
- மத்திய அமைச்சர்
- ஜோதிராதித்ய சிந்தியா
- மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர்
- தின மலர்
புதுடெல்லி: இன்னும் ஒரு வருடத்தில் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தொலைத்தொடர்பு இணைப்பு ஏற்படுத்தப்படும் என்று ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கூறினார். இதுகுறித்து ஒன்றிய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா நேற்று கூறுகையில்,‘‘ தொலைதொடர்பு வசதியில் 100 சதவீதம் என்ற நிலையை எட்ட வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். நாட்டில் உள்ள 24 ஆயிரம் கிராமங்களுக்கு இன்னும் தொலை தொடர்பு வசதி கிடைக்கவில்லை என்பதை கண்டறிந்துள்ளோம்.
இந்த கிராமங்களுக்கு தொலை தொடர்பு வசதிகள் கிடைக்க செய்வதற்காக சிறப்பு திட்டத்தை அரசு உருவாக்கியுள்ளது. அதற்கென ஒதுக்கப்பட்ட நிதியுடன் அந்த கிராமங்களில் தொலை தொடர்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 12 மாதங்களுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
The post 24 ஆயிரம் கிராமங்களில் இன்னும் ஒரு வருடத்தில் தொலைத்தொடர்பு வசதி: ஒன்றிய அமைச்சர் சிந்தியா உறுதி appeared first on Dinakaran.