ஒன்றிய அரசு பட்ஜெட்; மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்வது இது புதிதல்ல: மாயாவதி விமர்சனம்


டெல்லி:பட்ஜெட்டில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு நடந்துகொள்வது இது புதிதல்ல என பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்த ஒன்றிய பட்ஜெட்டில் தேஜ கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஒன்றிய பட்ஜெட் மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டி இருப்பதாகக் குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை எழுப்பின.

பல்வேறு தரப்பில் கண்டனங்களும் எழுந்து வருகிறது. இந்தநிலையில் ஒன்றிய அரசு பட்ஜெட்; மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்வது இது புதிதல்ல என பகுஜன் சமாஜ் தேசியத் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். அதில், ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மாயாவதி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் பாகுபாட்டை உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் ஆட்சிகாலத்திலும் சந்திக்க வேண்டியிருந்தது. பட்ஜெட் மீது அதிருப்தியால் பாஜக ஆளாத மாநிலங்களின் முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தனர். நாடு மற்றும் நாட்டு மக்களின் நலனுக்கு ஒன்றிய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

The post ஒன்றிய அரசு பட்ஜெட்; மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்வது இது புதிதல்ல: மாயாவதி விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: