ஐ.நா. நடத்தும் மருத்துவமனைகள், பள்ளிகளை இஸ்ரேலிய ராணுவம் நேரடியாக தாக்கியுள்ளதாக ஐ.நா.வின் மீட்பு மற்றும் நிவாரண அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. டாங்கிகளுடன் தங்களது வளாகத்திற்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. அங்கு தங்களது தளவாடங்களை அமைத்து அங்கு பணியில் இருப்பவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாகவும் ஐ.நா. வேதனை தெரிவித்துள்ளது. ஐ.நா. நடத்தும் மருத்துவமனையில் நடத்தபட்ட தாக்குதலில் 5 பேர் கொல்லபட்டதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
பொதுமக்கள் மீது தக்குதல் நடத்தபடுவது பண்ணாட்டு விதிகளை மீறும் செயல் என ஐ.நா.வின் மீட்பு மற்றும் நிவாரண அமைப்பு கூறியுள்ளது. காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லபட்ட 102 ஐ.நா. பணியாளர்களுக்கு ஐ.நா. அவையில் இரங்கல் தெரிவிக்கபட்டது. ஐ.நா. பொது அவையில் உள்ள கொடி கம்பத்தில் ஐ.நா.வின் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடபட்டு மரியாதை செலுத்தபட்டது.
காஸாவில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு உயிர்நீத்த ஐ.நா.பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவிக்கபட்டது. ஐ.நா. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று ஐ.நா.வின் பிற அலுவலகங்கள் முன்பும் அரை கம்பத்தில் கொடி பறக்கவிடப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
The post ஐ.நா. நடத்தும் மருத்துவமனைகள், பள்ளிகள் மீது இஸ்ரேலிய ராணுவம் நேரடி தாக்குதல்: இஸ்ரேல் தாக்குதலில் 102 ஐநா பணியாளர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.