தற்போது க்யூட் என்ற பெயரில் இளங்கலை பட்டப்படிப்புக்கே நுழைவு தேர்வை மீண்டும் கொண்டு வர ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. யுஜிசி 2024 வரைவு அறிக்கையில், தொழிற்கல்வியிலிருந்து பொதுக்கல்விக்கு அல்லது பொதுக் கல்வியிலிருந்து தொழிற்கல்விக்கு இடம்பெயர்தல் மாணவர்கள் தங்கள் இலக்கை அடைய உதவாது. இது முற்றிலும் மாணவர்களின் நலனுக்கு எதிராகவே அமையும். இதுகுறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் விஜயகுமார் (ஓய்வு), தொழில்நுட்பக் கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் மற்றும் கல்லூரி, பாலிடெக்னிக் முதல்வர்கள் பங்கேற்றனர்.
The post யுஜிசி வரைவு அறிக்கை இலக்கை அடைய உதவாது: அமைச்சர் கோவி.செழியன் பேச்சு appeared first on Dinakaran.