×

டிரம்பின் வரி மிரட்டலால் போர் நிறுத்தமா? பிரதமர் மோடி மவுனத்தை கலைக்க காங். கோரிக்கை

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்த அதிபர் டிரம்ப் தனது வரி அதிகாரத்தை பயன்படுத்தினார் என அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் கடந்த மே 23ம் தேதி நியூயார்க்கில் உள்ள அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது உண்மையா என்பதை பிரதமர் மோடி நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இது குறித்து இந்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் தரப்படவில்லை. மேலும் அதிபர் டிரம்பை போலவே அமைச்சர் லுட்னிக்கும்11 நாட்களில் 3 வெவ்வேறு நாட்களில் 8 முறை இந்த தகவலை கூறி உள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோவும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.

The post டிரம்பின் வரி மிரட்டலால் போர் நிறுத்தமா? பிரதமர் மோடி மவுனத்தை கலைக்க காங். கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Trump ,Congress ,PM Modi ,New Delhi ,General Secretary ,Jairam Ramesh ,US ,Commerce Secretary ,Howard Lutnick ,President Trump ,India ,Pakistan… ,Dinakaran ,
× RELATED திருப்பூரில் நடைபெற்று வரும் திமுக...