×

தவெகவுடன் வேறு கட்சிகள் கூட்டணி சேருமா?: செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

கோவை: கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று காலை பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் தவெகவுடன் சேர்வது குறித்து பேசி வருகிறார்களாமே என்று கேட்டதற்கு, ‘‘பல இடங்களில் இந்த கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது. எங்களைப் பொறுத்தவரை தெளிவாக இருக்கிறோம். விஜயை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்கள் மட்டும்தான் எங்கள் கூட்டணியில் இணைய முடியும்’’ என்றார்.

ஆர்எஸ்எஸ் பெற்று எடுத்த குழந்தை தவெக என திருமாவளவன் விமர்சித்து இருப்பது குறித்த கேள்விக்கு, ‘‘ஒவ்வொரு தலைவரும் ஒரு கருத்தை சொல்கிறார்கள். அப்படி நாங்கள் சொல்ல வேண்டும் என்று சொன்னால் இலங்கை தமிழருக்கு குரல் கொடுத்த சீமான், அங்கு விருந்து சாப்பிட்டுவிட்டு பரிசு வாங்கி வந்த காலமும் இருக்கிறது’’ என பதிலளித்த அவர், திருமாவளவன் என்பதற்கு பதிலாக சீமான் என பெயரை தவறுதலாக கூறினார். கூட்டணியில் எப்போது மற்ற கட்சிகள் இணையும் என்ற கேள்விக்கு, ‘‘பொறுத்து இருங்கள் ஜனவரி முதல் வாரத்திற்குள் அனைத்தும் தெரியும்’’ என்றார்.

Tags : Tawek ,KOWAI ,CHENGOTTAYAN ,DAVEKA MANAGEMENT COMMITTEE ,KOWAI AIRPORT ,
× RELATED பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு