திருச்சியில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த விவகாரத்தில் இருவர் கைது; போலீசார் அதிரடி..!!

திருச்சி: திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்துகொண்டே பட்டாசு வெடித்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டனர். தீபாவளியை ஒட்டி நம்பர் பிளேட் இல்லாத பைக்கில், போலீசிடம் சிக்காமல் இருக்க ஹெல்மெட் அணிந்தவாறு இளைஞர் ஒருவர் தனது பைக்கில் வீலிங் செய்து பட்டாசு வெடித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பைக்கின் முன்பு வான வேடிக்கை பட்டாசுகளை கட்டிக்கொண்டு, மக்களை அச்சுறுத்தும் வகையில் வீலிங் செய்யப்பட்டது.

டெவில் ரைடர்ஸ்’ என்ற இன்ஸ்டா அக்கவுன்டில் வீடியோ பகிரப்பட்டது. ‘பைக் விலாகிங்’ என்ற பெயரில் சாலையில் அத்துமீறும் இளைஞர்களால் மக்களை அச்சமடைந்தனர். சாகசம் என்ற பெயரில் தங்களது உயிருக்கு மட்டுமல்லாமல், சாலையில் பயணிக்கும் பிற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இந்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. எனவே இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் வலியுறுத்தினர்.

இதனிடையே பைக் சாகசத்தில் ஈடுபட்டது தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என கண்டுபிடிக்கப்பட்டது. வீடியோ எடுத்தது திருச்சி கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்துகொண்டே பட்டாசு வெடித்த விவகாரத்தில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பைக் வீலிங் செய்தவாறு இளைஞர் பட்டாசு வெடித்த நிலையில், விதிமீறலுக்கு உதவியதாக இளைஞர் அஜயைபோலீஸ் கைது செய்தது. இதேபோல் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த உசேன் பாஷா (24) என்பவர் லகது செய்யப்பட்டார். திருச்சி ஜாபர்ஷா தெருவை சேர்ந்த உசேன் பாஷாவை கோட்டை போலீசார் கைது செய்தனர்.

 

The post திருச்சியில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த விவகாரத்தில் இருவர் கைது; போலீசார் அதிரடி..!! appeared first on Dinakaran.

Related Stories: