சென்னை: சுங்கச்சாவடியில் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து வரும் 9ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தொடர்ந்து சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து தேமுதிக சார்பில் வரும் 9ம் தேதி(சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட சுங்கச்சாவடிகள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழகம் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்த போராட்டத்தை மாபெரும் வெற்றி போராட்டமாக மாற்ற வேண்மென கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஒன்றிய அரசை கண்டித்து 9ம் தேதி போராட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு appeared first on Dinakaran.