×

20 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை காரணமாக கடந்த ஒரு மாதமாக பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஆந்திராவில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாததால் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று 72,174 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 35.192 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.2.88 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சிலா தோரணம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post 20 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Lord ,Swami ,Tirupati Ezhumalaiyan Temple ,Tamil Nadu ,Andhra Pradesh… ,
× RELATED டெல்லியில் காற்றின் தரக்குறியீடு...