- இந்தியா
- புனே புத்தகத் திருவிழா:
- எங்களுக்கு
- புனே
- புனே புத்தகத் திருவிழா
- பெர்குசன் கல்லூரி, புனே
- தேசிய புத்தக அறக்கட்டளை
புனே: தேசிய புத்தக அறக்கட்டளை சார்பில் புனே பெர்குசன் கல்லூரியில் ‘புனே புத்தக திருவிழா’ நடைபெற்று வருகிறது. இதில் பழங்குடியின எழுத்துக்களை காட்சிப்படுத்தும் விதமாக 1,678 போஸ்டர்கள் காட்சிபடுத்தப்பட்டன. இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான போஸ்டர்களை காட்சிபடுத்துதல் பிரிவின் கீழ் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 1,365 போஸ்டர்களை காட்சிப்படுத்தி அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த உலக சாதனையை உறுதி செய்த கின்னஸ் உலக சாதனை நடுவர் ஸ்வப்னில் டங்ரிகர், அதிக எண்ணிக்கையிலான போஸ்டர்களை காட்சிப்படுத்தியதற்கான சாதனையை இந்தியா இப்போது அமெரிக்காவை முந்திப் பிடித்துள்ளது என தெரிவித்தார்.
மேலும் இதற்கான சான்றிதழில் அதிக எண்ணிக்கையிலான போஸ்டர்களை காட்சிப்படுத்தியதற்கான உலக சாதனை, புனே புத்தகத் திருவிழா, யஷ்வந்த்ராவ் சவான் மகாராஷ்டிரா திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் ரைஸ் அறக்கட்டளை ஆகியவற்றால் டிசம்பர் 12 அன்று புனேயில் எட்டப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சாதனை, பழங்குடியின தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான பிர்சா முண்டாவிற்கு ஒரு அஞ்சலியாகும். அவரது வாழ்க்கையும் பணிகளும் புத்தக திருவிழாவில் ஒரு சிறப்பு அரங்கம் மூலம் முன்னிலைப்படுத்தப்படுகின்றன என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
