தடயவியல் சைபர் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. போலி இணையதளம் குறித்து சைபர் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரை பயன்படுத்திய மோசடியில் ஈடுபடுவதாக தற்போது வரை 41 போலி இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://tirupatibalaji.ap.gov.in/ என்று உள்ள நிலையில், சிலர் சிறிய மாற்றங்கள் செய்து (https://tirupatibalaji:ap:gov.org/)என்ற இணையதளத்தை உருவாக்கி மோசடி செய்வது அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆர்ஜித சேவைகள், தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகளை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுதவிர, TTDevasthanams என்ற மொபைல் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியையும் பயன்படுத்தலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
The post திருமலை திருப்பதி தேவஸ்தான 41 போலி இணையதளங்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.