×

திருவிடைமருதூர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பாமக பிரமுகர் திருவிடைமருதூர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக சோதனை நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமலிங்கம் கொலை வழக்கில் இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள 6 பேரை பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மதமாற்றம் தொடர்பான மோதலில் கடந்த 2019-ல் ராமலிங்கம் வெட்டி கொலை செய்யப்பட்டார். மதமாற்றம் தொடர்பான மோதலில் கடந்த 2019ம் ஆண்டு பாமக பிரமுக ராமலிங்கம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ராமலிங்கம் கொலை வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ள நிலையில் தலைமறைவான 6 பேரை பிடிக்க போலீஸார் திவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 25 இடங்களில் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணம் அருகே திருபுவனம், திருமங்கலக்குடி, மேலக்காவேரி, கருப்பூர் உள்பட 25 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. காலை முதலே என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

The post திருவிடைமருதூர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Tags : Thiruvudaymarathur Ramalingam ,Tamil Nadu ,Chennai ,Pamaka Pramukar ,Thiruvidamuradur Ramalingam ,Ramalingam ,Thiruvaymarathur Ramalingam ,Dinakaran ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...