×

கோவளத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி: 360 மாணவிகள் பங்கேற்பு

திருப்போரூர்: கோவளத்தில் நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் 360 மாணவிகள் பங்கேற்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் செங்கல்பட்டு மாவட்ட அளவிலான பள்ளி மாணவிகளுக்கு இடையிலான கபடி போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளில் 10 குறுவட்ட அளிலான 30 பள்ளிகளை சேர்ந்த 360 மாணவிகள் பங்கேற்றனர்.

போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் செங்கல்பட்டு புனிதமேரி பள்ளி மாணவிகளும், 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் கோவளம் அரசு பள்ளி மாணவிகளும், 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் புதுப்பட்டினம் அரசு பள்ளி மாணவிகளும் வெற்றிபெற்றனர்.

The post கோவளத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி: 360 மாணவிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : District Level Kabaddi Tournament ,Kovalam ,Girls ,Chengalpattu ,Kovalam Government Higher Secondary School ,East Coast Road ,Kovalam District Level Kabaddi Tournament: 360 Girls ,
× RELATED மாமல்லபுரத்தில் 2வது நாளாக சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்