காற்று மாசை கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள நேரத்தில் திருத்துறைப்பூண்டி அரசு பள்ளி நிகழ்ச்சியில் அறிவுறுத்தல்

 

திருத்துறைப்பூண்டி, நவ. 11: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பின் சார்பாக பசுமை தீபாவளி கொண்டாட வலியுறுத்தி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலலிதா தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற தமிழாசிரியர் கோமல் தமிழமுதன், உதவி தலைமை ஆசிரியர் பாலமுருகன், ஆசிரியர் சங்க செயலாளர் முகமது ரபீக், ஆசிரியர்கள் பாஸ்கரன், பாலசுப்ரமணியன், பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். ஓவிய ஆசிரியர் அன்புமணி வரவேற்றார்.நாட்டு நலப்பணி திட்ட அலுவலரும் மன்னார்குடி சாரண மாவட்ட செயலாளருமான சக்கரபாணி பேசுகையில், வருடத்தில் எத்தனையோ பண்டிகைகள் இருந்தாலும் தீபாவளி பண்டிகை என்றால் குழந்தைகளுக்கு படு உற்சாகம் இனிப்பு புத்தாடை புதிய ஒளிபாய்ச்சக்கூடிய பட்டாசுகள் எல்லாமே மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

தீமை என்னும் இருள் அகன்று நன்மை என்னும் வெளிச்சம் பிறக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி இன்றைய காலகட்டத்தில் இந்த பண்டிகையை மாசு இல்லாமல் செயற்கை உற்பத்தி பொருள்களின் பயன்பாடு இல்லாமல் பசுமையாக கொண்டாடுவதில் தான் சவாலே இருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் கொண்டாட செயற்கை விளக்குகளுக்கு பதிலாக முற்றிலும் எரிந்து சாம்பலாக கூடிய மாட்டு சாணத்தால் ஆன விளக்குகள், தேனீக்களின் மெழுகால் செய்யப்பட்ட விளக்குகள், ரோஜா இதழ் விளக்குகள் போன்றவற்றை வாங்கி பயன்படுத்தலாம் பண்டிகை என்றாலே பரிசளிப்பு இல்லாமல் இருப்பதில்லை. அந்த பரிசின் வெளியானது எவ்வளவு என்பதை விட அதன் பயன் என்ன என்பதில் தான் இருக்கிறது. அன்பின் வெளிப்பாட்டினை பொருட்களாக பரிசளிக்காமல் சுத்தமான காற்றை பரப்பக்கூடிய செடிகளை பரிசாக வழங்குங்கள்.

உங்கள் பிடித்தமானவரின் வாழ்நாள் அதிகரிக்கும் இயற்கையின் சிறந்த காற்று மாசை நீக்கும் சக்தி படைத்த செடிகளை பரிசளிக்கலாம் எடுத்துக்காட்டாக மணி பிளான்ட், போன்சாய் மரங்கள் போன்றவற்றை பயன்படுத்தலாம். பரிசளிக்கும் பொருட்கள் அவை சுற்றப்பட்டிருக்கும் தாள்கள் என எல்லாவற்றையும் இயற்கைக்கு ஒரு விளைவிக்காத மொத்தம் தன்மையுள்ளவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட பைகள் கூடைகளை பயன்படுத்துங்கள். இந்த தீபாவளி என்றாலே அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்தல் என்பது வழக்கமாக நடைபெற ஒன்று.இந்த எண்ணெய் குளியலிலும் ஆரோக்கியத்தை தேர்வு செய்யுங்கள். நெல்லிக்காய், சீயக்காய், செம்பருத்தி, வேப்பிலை, துளசி உள்ளிட்ட இயற்கை பொருள்களை பயன்படுத்தி ஆரோக்கிய பொடியை தேர்வு செய்து பக்க விளைவுகள் இல்லாத குளியலை நாம் மேற்கொள்ளலாம். நாம் மட்டும் பண்டிகையை கொண்டாடாமல் கண்ணிற்கு தெரியாத சிறு ஜீவராசிகளையும் மகிழ்விக்க இயற்கை சாயங்களை கொண்டு கோலங்கள் வீட்டில் போடலாம்.

மொழி மாற்றம் காற்று மாசை கட்டுப்படுத்த விதமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடித்து அதிக சப்தத்தையும் அதிக ஒலியையும் தரும் பட்டாசுகளுக்கு பதிலாக கிரீன் பட்டாசுகளை பயன்படுத்தலாம் கிரீன் பட்டாசுகள் குறைவான சத்தத்துடன் வெள்ளை மற்றும் மஞ்சள் வண்ண நிறங்களில் மட்டுமே ஒளிரும் வேதியியல் பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படாததால் குழந்தைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது. மேலும் இந்த தீபாவளி ஆனது பசுமை தீபாவளியாக, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தீபாவளியாக, விபத்தில்லா தீபாவளியாக கொண்டாட உறுதி ஏற்போம் என்றார். தலைமையாசிரியர் ஜெயலலிதா பசுமை தீபாவளியை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு செடிகளை பரிசாக வழங்கினார். இதில் ஆசிரியர் சண்முகவேல், இளநிலை உதவியாளர் குமார், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.

The post காற்று மாசை கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள நேரத்தில் திருத்துறைப்பூண்டி அரசு பள்ளி நிகழ்ச்சியில் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: