படுத்தினார். இது ஆபத்தற்ற வழியில் நெற்றியிலிருந்து 2 விநாடிகளுக்குள் வெப்பநிலையை அளவிட்டது. இது மருத்துவ ரீதியில் துல்லியமான உடல் வெப்பநிலையை வழங்கியது.
வெப்பத்தைப் உள்வாங்கும்போது பொருட்கள் விரிவடையும் எனும் இயற்பியல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வெப்பமானி அமைந்துள்ளது. வெப்பமானி தந்துகிக் குழாய் உள்ள கண்ணாடித் துண்டால் செய்யப்பட்டது. இரு புறமும் நன்கு மூடப்பட்ட இதன் அடிமுனை சிறு குமிழாக இருக்கும். இக்குமிழ்ப் பகுதியில் பாதரசம் அல்லது ஆல்கஹால் நிரப்பப்பட்டிருக்கும். குழாயின் எஞ்சிய மேற்பகுதி வெற்றிடமாக இருக்கும். சூடான பொருளின் மீது குமிழ்ப்பகுதியை வைத்தால் அதன் வெப்ப சக்திக்கேற்ப குமிழிலுள்ள பாதரசம் அல்லது ஆல்கஹால் விரிவடைந்து மேலேறும். வெற்றிட மேற்பகுதி வெப்பநிலையில் அளவைக் குறிக்க எண்களும் கோடுகளும் இருபுறமும் இருக்கும். எந்த எண் வரை பாதரசம் அல்லது ஆல்ஹால் ஏறி நிற்கிறதோ அந்த அளவே அப்பொருளின் வெப்ப அளவு ஆகும். சூடான பொருளிலிருந்து வெப்பமானியை எடுத்துவிட்டால் பாதரசம் அல்லது ஆல்கஹால் உச்ச, நீச வெப்பமானி வெப்பத்தை இழந்து மீண்டும் பழைய நிலையில் அடிக்குமிழுக்குள் சென்றுவிடும்.
வெப்பநிலையை செல்சியஸ், ஃபாரன்ஹீட் மற்றும் ரோமர் என்ற அளவு முறைகளில் அளந்து வந்தோம். அதையடுத்து கெல்வின் என்ற அளவு முறை உலகளவில் பரவியது. நமது உடலின் வெப்பநிலையை 370 செல்சியஸ் = 98.4 ஃபாரன்ஹீட் = 310 கெல்வின் என்று கூறலாம். ஒரு நாளின் உயர்ந்த-தாழ்ந்த வெப்பநிலைகளைக் கண்டறிய உச்ச-நீச வெப்பமானி பயன்படுகிறது.மருத்துவர்கள் உடலின் வெப்ப நிலையை அளக்க வெப்பமானியை சிறிது நேரம் வாயினுள்ளோ அல்லது கக்கத்திலோ வைத்துப் பார்பார்கள். மேலேறிய பாதரசம் மீண்டும் குமிழுள் இறங்காது உடலின் வெப்ப நிலையை உடனடியாகவோ அல்லது சிறிது நேரம் தாழ்த்தியோ பார்க்க இயலும். பாதரசம் மறுபடியும் குமிழுள் இறங்க வெப்பமானியைச் சற்று பலமாக உதற வேண்டும். வெப்பம் மிகுந்த பகுதிகளில் பாதரசத்தையும் குளிர்ச்சி மிகுந்த துருவப் பகுதிகளில் உறைநிலை மிகுந்த ஆல்கஹாலையும் வெப்ப மானியில் பயன்படுத்தி வெப்பநிலைகளை அறிகின்றனர்.