மணிப்பூரில் தற்போது அமைதி நிலவுகிறது: அண்ணாமலை பேட்டி

ராமேஸ்வரம்: மணிப்பூரில் தற்போது அமைதி நிலவுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் என் மண் என் மக்கள் யாத்திரையை நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வந்தார். இந்நிலையில் இன்று ஏரகாடு என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை; 2001-இல் இருந்து 2014-ஆம் ஆண்டு வரை 85 மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியான சூழல் தற்போது இல்லை. பாஜக ஆட்சியில்தான் தமிழ்நாடு மீனவர்கள் கைது நடவடிக்கை குறைந்துள்ளது.

கச்சத்தீவு, நெடுந்தீவு பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கிறது. என்.எல்.சி. விரிவாக்கத்தை தடைசெய்தால் பலர் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். 16,000 தமிழக தொழிலாளர்களின் நிலை என்ன ஆவது?. சட்டத்திற்கு உட்பட்டு என்.எல்.சி. விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும். மணிப்பூரில் தற்போது அமைதி நிலவுகிறது. மணிப்பூரில் அமைதிப் பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காண முடியும் என்று கூறினார்.

The post மணிப்பூரில் தற்போது அமைதி நிலவுகிறது: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: