இந்த விழாவை முன்னிட்டு நாள்தோறும் கோயிலில் இருந்து ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூ தேவி சமேதராய் குளத்திற்கு புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு சமேதராய் வீற்றிருக்கும் வீரராகவருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீப ஆராதனை நடத்தப்பட்டு மின் அலங்காரம் செய்யப்பட்ட தெப்பத்தில் 3 முறை உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த தெப்பத்திரு விழாவில் திருவள்ளூர் மட்டுமல்லாது சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதற்கான முன்னேற்பாடு பணிகளை கோயில் கவுரவ ஏஜென்ட் ஸ்ரீ ரங்கநாதன், மக்கள் தொடர்பு அலுவலர் சம்பத் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
The post வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம் நாளை தொடக்கம் appeared first on Dinakaran.