தேன்கனிக்கோட்டை பகுதியில் யானை தாக்குதலில் இருந்து பாதுகாக்க எஃகு வேலி அமைக்க அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தேன்கனிக்கோட்டை பகுதியில் யானை தாக்குதலில் இருந்து பாதுகாக்க ரூ.3.5 கோடியில் எஃகு வேலி அமைக்க ரூ.3.5 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. கோவை தொண்டாமுத்தூரில் ரூ.5 கோடி மதிப்பில் 10 கி.மீ. நீளத்துக்கு யானை புகாத நவீன பாதுகாப்பு வேலி அமைக்கப்படும். 2 மாவட்டங்களிலும் களஆய்வின்போது முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகளை செயல்படுத்தும் விதமாக அரசாணை உள்ளது.

தொண்டாமுத்தூர் பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் நிகழும் மனித விலங்கு மோதல் சம்பவங்களைத் தடுக்கவும் பயிர் சேதங்களையும் உயிரிழப்புகளையும் தவிர்க்கவும் சுமார் 7 கோடி ரூபாய் செலவில் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு யானை புகாத நவீன பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும். முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர், கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூரில் நவீன யானைத் தடுப்பு வேலி அமைப்பதற்காக ரூ.7.00 கோடியை அனுமதிக்குமாறு கோரியுள்ளார்.

மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூரில் நவீன யானைத் தடுப்பு வேலி அமைப்பதற்காக ரூ.5 கோடி தொகையை அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. அனுமதிக்கப்பட்ட தொகை பின்வரும் கணக்குத் தலைப்பில் பற்று வைக்கப்படும். வனவியல் மற்றும் வனவிலங்குகளுக்கான மூலதனச் செலவு, வனவியல் வனப் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் மாநிலத்தின் செலவு, வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக வேலி அமைத்தல் முக்கியப் பணிகள் மேற்கொள்ள அரசு அனுமதித்துள்ளது.

2024-2025 ஆம் ஆண்டிற்கான துணை மதிப்பீடுகளில் சேர்ப்பதன் மூலம் சட்டமன்றத்தின் ஒப்புதலை உரிய நேரத்தில் பெற வேண்டும். சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்கு காத்திருக்கும் வரை, செலவினத்தை ஆரம்பத்தில் தற்செயல் நிதியிலிருந்து முன்பணம் பெற்று கொள்ளலாம்.

The post தேன்கனிக்கோட்டை பகுதியில் யானை தாக்குதலில் இருந்து பாதுகாக்க எஃகு வேலி அமைக்க அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: