தேனி: தேனியில் கோவை சரக டிஐஜி விஜயகுமார் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர் பெரியசாமி, டிஐஜி அபினவ் குமார், எஸ்.பி. பாஸ்கரன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை கோவை முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டார்.