மரக்கன்றுகள் திருட்டு

 

ஓசூர், ஜூலை 31: ஓசூர் மாநகராட்சி ராயக்கோட்டை அட்கோ சாலையில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புங்கை மரக்கன்றுகள் வைக்கப்பட்டிருந்தன. மாநகராட்சி பகுதிகளில் நடுவதற்காக வைக்கப்பட்டிருந்த இந்த 50 புங்கை மரக்கன்றுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். அதன் மதிப்பு ரூ.10 ஆயிரத்து 500 ஆகும். இதுகுறித்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மோகன் ஓசூர் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த புங்கை மரங்கள் சுதந்திர தினத்தன்று பல்வேறு பகுதிகளில் நட வைத்திருந்தது என தெரிய வந்துள்ளது.

The post மரக்கன்றுகள் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: