×

மக்களை மதத்தால் பிளவுபடுத்தும் சக்திகளை தலைதூக்க விடமாட்டோம்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி


சென்னை: சென்னை, கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோயிலில் நேற்று அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்ட பயணத்தில் பங்கேற்கும் 200 மூத்த குடிமக்களுக்கு பயணவழிப் பைகளை வழங்கி, ஆன்மிகப் பயணப் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: மூத்த குடிமக்களுக்காக அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் கடந்த ஜனவரி 28ம் தேதி இதே கந்தக்கோட்டத்தில் தொடங்கப்பட்டு 1,008 பக்தர்கள் பயன்பெற்றுள்ளனர். எல்லோருக்கும் எல்லாம் என்று ஆட்சி செய்யும் முதல்வர், எந்த மதத்தினரையும் இழிவுபடுத்துவதை நிச்சயமாக அனுமதிக்க மாட்டார்.

கானா பாடகி இசைவாணி பாடிய பாடல் சர்ச்சை குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது என பத்திரிகை வாயிலாக அறிந்தேன். இதுகுறித்து சட்ட வல்லுனரோடு கலந்து ஆலோசித்து தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். மதத்தால், இனத்தால் மக்களை பிளவுபடுத்துகின்ற சக்திகள் இந்த ஆட்சியில் தலை தூக்க முடியாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை ஆணையர் தர், கூடுதல் ஆணையர் சுகுமார், இணை ஆணையர்கள் லட்சுமணன்,ஜெயராமன், முல்லை, உதவி ஆணையர் சிவக்குமார் கலந்து கொண்டனர்.

The post மக்களை மதத்தால் பிளவுபடுத்தும் சக்திகளை தலைதூக்க விடமாட்டோம்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,CHENNAI ,Arupadai ,Veedu ,Journey ,Muthukumarasamy Temple ,Kandhakottam, Chennai ,
× RELATED கோயில் யானைகளை 15 நாட்களுக்கு ஒருமுறை...