உங்கள் திட்டம் என்ன? எத்தனை சதவீத பணி முடிந்துள்ளது? கால வரையறை வரைபடத்தை (பார் சார்ட்) தர இயலுமா? என கேட்டதற்கு அமைச்சர், ஒவ்வொரு முறை கேட்கும்போதும் சொல்கிற கதையையே வரி மாறாமல் திரும்ப ஒப்பித்துள்ளார். மீண்டும் மீண்டும் கேட்டு புளித்துப் போன கதை. கடைசியில் சுற்றுச்சுவரை கடக்கவே இல்லை என்பதே கசப்பான உண்மை. தமிழ்நாட்டிற்கு நீங்கள் இழைக்கும் வஞ்சனையை உங்களின் பதில் வெட்ட வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. எனது கேள்விக்கு கால வரைபடத்தை கூட தர முடியாத அளவு தோல்வி அடைந்துள்ள ஒரு அரசாக ஒன்றிய அரசு இருக்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post ‘அந்த வாழைப்பழந்தான் இது….’ எய்ம்ஸ் பற்றி ஒரே பதிலை எப்போதும் தரும் ஒன்றிய அரசு: மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் appeared first on Dinakaran.