பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: எனது பிறந்த நாளையொட்டி என்னை நேரில் சந்தித்தும், தொலைபேசி, வாழ்த்து கடிதம், சமூக வலைதளம் ஆகியவற்றின் மூலமாக எனக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். மேலும், எனக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எம்பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், நடிகர் கமல்ஹாசன், சமக தலைவர் சரத்குமார் ஆகியோருக்கு என் நன்றிகள்.

The post பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி appeared first on Dinakaran.

Related Stories: