×

தஞ்சாவூர் மாவட்டம் சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், தாமரங்கோட்டை தெற்கு கிராமம், கரிசல்காடு கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மாலை திருவாரூர் மாவட்டம், தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தைச் சேர்ந்த 42 நபர்கள் நான்கு சக்கர வாகனத்தில் நடவுப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது எதிர்பாராதவிதமாக வாகனத்தின் சக்கரம் வெடித்து வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் அதில் பயணம் செய்த துர்கையம்மாள் (60) என்ற பெண்மணி பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையுமடைந்தேன். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் 41 நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தஞ்சாவூர் மாவட்டம் சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur district ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,Pattukottai Circle ,Thamarangottai South Village ,Karisalkadu East Coast Road ,Tiruvarur District ,Thampikottai Keezalkadu Village ,M. K. Stalin ,
× RELATED கேரளாவின் வரவேற்பு மிகுந்த...