இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சம்சு நிஹார், அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துகுமார், டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் கே.சதீஷ்குமார், மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் சண்முகவள்ளி சேகர் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது, டெட்ரா பாக்கெட்களில் மதுபானம் விற்பதால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு இன்னும் அரசுக்கு அறிக்கை அளிக்கவில்லை. மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மாநிலம் முழுவதும் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், தற்போதைய நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. நிபுணர் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.
The post டெட்ரா பாக்கெட்டில் மதுபானங்கள் விற்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைப்பு: ஐகோர்ட்டில் டாஸ்மாக் தகவல் appeared first on Dinakaran.