×

மணிப்பூரில் 7 தீவிரவாதிகள் சிக்கினர்


இம்பால்: மணிப்பூரின். இம்பால் கிழக்கு மாவட்டத்தில் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட தடை செய்யப்பட்ட கேசிபி அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். சுராசந்த்புர் மாவட்டத்தில் உள்ள துய்போங்கில் சின் குகி தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் பிடிபட்டார். மேலும் வாங்கேய் அயங்பள்ளி பகுதியில் தடை செய்யப்பட்ட பிஆர்இபிஏகேவின் உறுப்பினர் ஒருவர், மாயாங் லாங்ஜிங் பகுதியில் மற்றொருவரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல் தவ்பால் மாவட்டத்தில் ஒருவர் உட்பட மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post மணிப்பூரில் 7 தீவிரவாதிகள் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,KCP ,Imphal East district ,Chin Kuki National Security Force ,Tuibong ,Surachandpur ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...