தீவிரவாத தாக்குதலை எதிர்த்து பாஜ சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்: தமிழிசை பேட்டி

சென்னை: தீவிரவாத தாக்குதலை எதிர்த்து பாஜ சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை நேற்று அளித்த பேட்டி: காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு மிகவும் சோகமான சூழ்நிலையில் இந்த நாடு உள்ளது. தீவிரவாத தாக்குதலை எதிர்த்து பாஜ சார்பில் நாளை(இன்று) மாலை 4 மணிக்கு மிகப்ெபரிய ஆர்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்குகிறார். அவரோடு நானும் கலந்து கொள்கிறேன். கோவையில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். இதில் வானதி சீனிவாசன் கலந்து கொள்கிறார். மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணனும், திண்டுக்கல்லில் எச்.ராஜாவும் தலைமை தாங்குகிறார்கள். அந்தந்த மாவட்டத்தில் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா ஒரு போதும் ஒத்துப்போகாது என்பதை வலியுறுத்துவதற்கான ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தானை சார்ந்த அதிகாரி சொன்னார். சிந்து நதியில் ரத்த ஆறு ஓடும் என்று. இந்தியா என்ன பதில் சொன்னது. ரத்தமும், தண்ணீரும் ஓரு சேர ஓட முடியாது என்பதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம் என்று சொன்னது. தீவிரவாதத்துக்கு எந்தவகையிலும் இந்தியா ஒத்துப் போகாது. தமிழகத்தில் எந்தெந்த மாவட்டத்தில் பாகிஸ்தானியர்கள் இருக்கிறார்கள் என்பதை தீவிரமாக கண்டுப்பிடித்து அவர்களை வெளியேற்ற வேண்டும். அதிமுக-பாஜ கூட்டணியில் எந்த அழுத்தமும் இல்லை.

The post தீவிரவாத தாக்குதலை எதிர்த்து பாஜ சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்: தமிழிசை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: