உயரமான இரும்பு கேட் மீது ஏறி ஆளுநர் மாளிகைக்குள் நள்ளிரவில் நுழைந்த வாலிபர்

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் இரும்பு கேட் மீது நள்ளிரவில் வடமாநில வாலிபர் ஒருவர் அத்துமீறி ஏறி உள்ேள நுழைந்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கிண்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி வசிக்கும் ராஜ் பவன் உள்ளது. மாளிகையின் பாதுகாப்பு பணியை 24 மணிநேரமும் மத்திய பாதுகாப்பு படையினர் கவனித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 28ம் தேதி மர்ம நபர் ஒருவர் நள்ளிரவு ஆளுநர் மாளிகையின் தர்கா கேட் மீது ஏறி உள்ளே நுழைந்துள்ளார். பிறகு இந்த மர்ம நபர் மாளிகையின் வெளிபகுதியில் சுற்றி திரிந்துள்ளார்.

இதை கவனித்த பாதுகாப்பு படை வீரர் ஒருவர், மர்ம நபரை துரத்தி பிடித்து கிண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ்குமாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சு பிரிசிகா(32) என்றும், திருநீர்மலையில் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சஞ்சு பிரிசிகாவை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.

The post உயரமான இரும்பு கேட் மீது ஏறி ஆளுநர் மாளிகைக்குள் நள்ளிரவில் நுழைந்த வாலிபர் appeared first on Dinakaran.

Related Stories: