ஆசிரியை நியமனம் தொடர்பான வழக்கில் பள்ளிக்கல்வித்துறை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: ஆசிரியை நியமனம் தொடர்பான வழக்கில் பள்ளிக்கல்வித்துறை தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி 6 ஆண்டுகளுக்கு பின் தாக்கல் செய்ததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு ரூ.500 அபராதமாக செலுத்தவும் பள்ளிக் கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2016ல் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றவில்லை என ஆசிரியை தரப்பில் 3 முறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில் 6 ஆண்டுக்குப் பின் பள்ளிக்கல்வித்துறை மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.

The post ஆசிரியை நியமனம் தொடர்பான வழக்கில் பள்ளிக்கல்வித்துறை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Related Stories: